பள்ளத்தாக்கில் கவிழ்ந்த வாகனம் - திருமணத்தில் பங்கேற்று வீடு திரும்பிய 10 பேர் பலி
இமாச்சல பிரதேச மாநிலத்தில், பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
இமாச்சல பிரதேச மாநிலம், சிர்மவுர் என்ற மாவட்டத்தில், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, வாகனத்தில், 12 பேர் வீடு திரும்பினர். பஸ்ஹோக் என்ற இடத்தில் வாகனம் வந்தபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் பலியாகினர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த இருவர் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment