ஜேக்கப் ஜூமா. 2009ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரையிலான ஆட்சிக் காலத்தில், ஜேக்கப் ஜூமா அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக தென் ஆப்ரிக்க நாட்டின் உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது.
விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதனால் நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக, முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு, 15 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதில், அரசியலமைப்பு சட்டம், நீதிமன்றம், துணை தலைமை நீதிபதி ரேமண்ட் சோண்டோ தலைமையிலான விசாரணை ஆணையத்துடன் ஒத்துழைக்க ஜேக்கப் ஜூமா மறுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment