ஜூன் 29: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ், பலி நிலவரம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, June 29, 2021

ஜூன் 29: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ், பலி நிலவரம்!

தமிழகத்தில், இன்று ஒரே நாளில், 4 ஆயிரத்து 512 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இந்நிலையில் இன்று, இரண்டாவது நாளாக கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்திற்கு கீழே பதிவாகியுள்ளது. இன்று புதிதாக 4 ஆயிரத்து 512 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 4 ஆயிரத்து 512 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2,599 பேர் ஆண்கள், 1,913 பேர் பெண்கள். இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 75 ஆயிரத்து 190 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில், இன்று ஒரே நாளில், 275 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad