பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலை ஒட்டி கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சியமைந்தால் குடும்பம் ஒன்றுக்கு 300 யூனிட் வரை இலவசம் மின்சாரம் வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
சண்டிகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் மாநிலத்தில் மின் உற்பத்தியில் எந்த குறைபாடும் இல்லை. இருந்தாலும் மாநிலத்தில் மணிக்கணக்கில் மின்வெட்டு நிகழ்கிறது. வீட்டில் ஒரு மின்விசிறி, ஒரு லைட் மட்டுமே வைத்திருப்பவர்களுக்கு ரூ.50,000 மின் கட்டணம் வருகிறது. இதற்கு ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தவுடன் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment