3வது அலையை குறைத்து மதிப்பிடாதிங்க! முதலமைச்சர் எச்சரிக்கை
மஹாராஷ்டிர மாநிலத்தில் ஒரு நாளைக்கு 15 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட மாநில அரசு தயாராக இருப்பதாக, அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள மலட் என்ற பகுதியில், கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை காணொலி வாயிலாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே திறந்து வைத்தார்.
இதன் பின்னர் அவர் பேசியதாவது:
கொரோனா பரவல் குறைந்தாலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும். கொரோனா குறைந்து விட்டதே என்று, பொதுமக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது. பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். ஒரு நாளைக்கு 15 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி தயாராக உள்ளோம்
No comments:
Post a Comment