இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, ''முதலமைச்சர் ஸ்டாலினின் தேர்தல் பரப்புரையின் போது பெறப்பட்ட மனுக்கள் மீது துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுக்களிலிருந்து சில பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு, முதலமைச்சரால் கடந்த 18-5-2021 அன்று 549 நபர்களுக்கும், 3-6-2021 அன்று 3,213 நபர்களுக்கு மற்றும் 11-6-2021 அன்று 1,100 நபர்களுக்கும் நலத் திட்ட உதவிகளுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
துறையின்கீழ் இதுவரை 1,21,720 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, 50,643 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (29.06.2021) வழங்கினார்.
No comments:
Post a Comment