நடைபயிற்சி, சைக்கிளிங் செல்லுதல், ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதையும் ஸ்டாலின் வழக்கமாக கொண்டுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின்போதும் பல கிராமங்களுக்கு நடைபயிற்சி சென்று மக்களை சந்தித்தார். அப்போது, அவர் சைக்கிளிங் செல்லும் வீடியோவும் வெளியாகி வைரலானது.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தனது உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் அக்கறை கொண்டவர். தனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள விரும்பும் ஸ்டாலினுக்கு உடற்பயிற்சி செய்வதில் அதிக ஆர்வம் உண்டு. இளைஞரணிச் செயலாளராக இருந்த காலத்திலும், அதற்கு முன்பும் காலையில் நடைபயிற்சி செய்து பொதுமக்களிட கோரிக்கை மனுக்களை பெறுவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.
No comments:
Post a Comment