தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.,யாக இருக்கும் திரிபாதியின் பதவிக்காலம், வரும் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. டி.ஜி.பி., பதவியை கைப்பற்ற கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில், அது தொடர்பான பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழக அரசு ஏற்கனவே அனுப்பியிருந்தது.
தொடர்ந்து, தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.,யை முடிவு செய்வதற்கான முக்கிய ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. சீனியாரிட்டி அடிப்படையிலும் தகுதி அடிப்படையிலும் முதலிடத்தில் இருக்கும் சைலேந்திரபாபு, தமிழகத்தின் அடுத்த டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment