"உண்மைக்கு புறம்பானது" - ஆம் ஆத்மியின் குற்றச்சாட்டுக்கு பஞ்சாப் முதல்வர் மறுப்பு
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, பஞ்சாப் மாநிலத்தில் செய்தியாளர்களை சந்திப்பதற்கு அனுமதி வழங்கவில்லை என்பது, உண்மைக்கு புறம்பானது என, அம்மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் விளக்கமளித்துள்ளார்
பஞ்சாப் மாநிலத்தில், முதலமைச்சர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில், அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை அரசியல் கட்சிகள் தற்போதிலிருந்தே தொடங்கி விட்டன. முக்கிய எதிர்க்கட்சியான சுக்பிர் சிங் பாதல் தலைமையிலான சிரோமணி அகாலி தளம் கட்சி, மாயாவதியின், பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment