இதை செஞ்சா போதும், தென் மாவட்டங்களுக்கு சூப்பர் பலன்: பிடிஆர் நம்பிக்கை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, June 29, 2021

இதை செஞ்சா போதும், தென் மாவட்டங்களுக்கு சூப்பர் பலன்: பிடிஆர் நம்பிக்கை!

மதுரை விமான நிலைய விரிவாக்கம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.


இதில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் கே.பி.கார்த்தி கேயன், விமான நிலைய இயக்குநர் செந்தில்வளவன், அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆய்வுக்கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணியில் நீண்ட காலமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்காக 615 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். அரசு புறம்போக்கு நிலம் 150 ஏக்கருக்கு மேல் உள்ளது. மீதி 450 ஏக்கரை மாநில அரசு கையகப்படுத்தி விமான நிலைய நிர்வாகத்திடம் கொடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad