2011-16 காலகட்டத்தின் ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராகப் பெரிய அலை எதுவும் வீசவில்லைதான். ஆனால் ஆட்சிக்கு எதிரான அதிருப்திகளுக்குப் பஞ்சம் இல்லை. குறிப்பாக 2015 சென்னை வெள்ளத்தை ஜெயலலிதா கையாண்ட விதம் குறித்த அதிருப்தி வலுவாக இருந்தது. எனவே சிறிய அளவில் ஆதரவு இடம் மாறினாலும் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது இயலாத காரியம் என்னும் நிலையில் ஜெயலலிதா இருந்தார்.
தமிழ்நாட்டு அரசியலில் மறக்க முடியாத பெயர் மக்கள் நலக் கூட்டணி. சுருக்கமாக மநகூ. 1991 தொடங்கி ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் ஆளுங்கட்சியை மாற்றிக்கொண்டிருந்த தமிழக மக்களின் பொக்குக்கு அணைபோட்ட பெருமையைக் கொண்டது இந்தக் கூட்டணி. முதலமைச்சர் வேட்பாளராக உங்கள் பெயரை அறிவிக்கலாமா என்று மேடையிலேயே கேட்டு அறிவிக்கும் அளவுக்கு முன்யோசனையும் திட்டமிடலும் நிரம்பி வழிந்த அவியல் கூட்டணி இது
No comments:
Post a Comment