இந்நிலையில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “எனக்கு கொரோனா தொற்று இருந்ததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது எனது இல்லத்தில் மருத்துவர்களின் ஆலோசனையின்படி தனிமையில் உள்ளேன். அடுத்த சில நாட்கள் நான் முழுமையாக ஓய்வு எடுக்க வேண்டியிருப்பதால் யாரும் என்னை நேரில் சந்திக்க வர வேண்டாம். கடந்த 10 நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்திட வேண்டுகிறேன்.
சர்ச்சைப் பேச்சுகளுக்கு பேர் போனவர் ராஜேந்திரபாலாஜி. அதிமுக அரசில் கடந்த பத்தாண்டுகாலம் அமைச்சராக வலம் வந்த இவர் அவ்வப்போது தனது பேச்சால் சர்ச்சையில் சிக்கினார். ஆட்சி பறிபோன பின்னர் ராஜேந்திரபாலாஜி அதிகம் தென்படவில்லை.
No comments:
Post a Comment