கொரோனா தாக்குதலில் இருந்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை! கலெக்டரய்யா...காப்பாத்துங்க! சுழற்சி முறைக்கு வேண்டுகோள் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, April 24, 2021

கொரோனா தாக்குதலில் இருந்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை! கலெக்டரய்யா...காப்பாத்துங்க! சுழற்சி முறைக்கு வேண்டுகோள்

கொரோனா தாக்குதலில் இருந்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை! கலெக்டரய்யா...காப்பாத்துங்க! சுழற்சி முறைக்கு வேண்டுகோள்


'கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, வீட்டை விட்டு யாரும் அனாவசியமாக வெளியே செல்லாதீர்கள்...முக கவசம் போடுங்கள்...கை கழுவுங்கள்...!'- இப்படியெல்லாம் மைக் வைத்து பிரசாரம் செய்யும் அரசுதான், மாணவர்களே வராத பள்ளிக்கு, ஆசிரியர்களை வரவழைத்து, கொரோனா பரவலை ஊக்குவிக்கிறது. தொற்றை கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம், வேடிக்கை பார்க்கிறது.

கொரோனா தொற்று காரணமாக, கடந்தாண்டு மார்ச் மாதம், பள்ளிகள் மூடப்பட்ட போது, ஆசிரியர்களுக்கும் விடுப்பு அளிக்கப்பட்டது. பின், பத்தாம் வகுப்புக்கு, ரிசல்ட் வெளியிடுவதற்காக, ஜூன் மாதத்தில் இருந்து, ஆசிரியர்கள் சுழற்சி முறையில், பள்ளிக்கு சென்றனர்.ஊரடங்கு கட்டுப்பாடுகள், படிப்படியாக தளர்த்தப்பட்டதால், ஜன.,18ம் தேதியில் இருந்து, அனைத்து ஆசிரியர்களும், பள்ளிக்கு வர ஆரம்பித்து விட்டனர்.இப்போது மீண்டும் தொற்று வேகமாக பரவுவதால், மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கற்பித்தல் பணி சுத்தமாக இல்லை. ஆனாலும், ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வலுக்கட்டாயமாக வரவழைக்கப்படுகின்றனர்.

வெவ்வேறு பகுதிகளில் இருந்து, பொது போக்குவரத்து மூலம், பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் மத்தியில், தற்போது வேகமாக கொரோனா தொற்று பரவி வருகிறது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் பலர், தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.விடுமுறை வேண்டும்ஆசிரியர்களில் பலர், 50 வயதை கடந்தவர்கள் என்பதால், சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய் பாதித்தவர்களாக உள்ளனர். ஓய்வு பெறும் வயதை, 58 வயதில் இருந்து 60 ஆக உயர்த்தியதால், இவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.நோய் தொற்றால், ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், குடும்ப உறுப்பினர்களும் பாதிக்கப்படுவதால், விடுமுறை அறிவிக்க வேண்டும்; வீட்டில் இருந்து ஆன்லைன் கற்பித்தலை தொடர தயார் என்கின்றனர்.தேர்தல் நேர கூட்டங்கள், பிரசாரங்களால் தொற்று பரவிய போது, மவுனம் காத்த அதிகாரிகள், தற்போது அரசு ஊழியர்களுக்கு, தொற்று பரவும் சமயத்திலும், எவ்வித முடிவும் எடுக்காமல் இருப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சுழற்சி முறையிலாவது...இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, '' ஆசிரியர்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்து, அரசுதான் முடிவு செய்ய வேண்டும்,'' என்றார்.மாவட்ட கலெக்டர் நாகராஜனிடம் கேட்டபோது, ''முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி பின்பற்றிதான், தொற்று ஏற்படாமல் காத்து கொள்ள வேண்டும். பிற அரசுத்துறை அலுவலர்களும், பணியில் உள்ளனர். ஆசிரியர்களுக்கு விடுப்பு அளிப்பது குறித்து, அரசுதான் முடிவு செய்ய வேண்டும்,'' என்றார்.
கோவையில் கொரோனா தொற்று, தினமும் 700ஐ கடந்து சென்று கொண்டிருக்கிறது. இக்கட்டான இவ்வேளையில், தொற்று மேலும் பரவுவதை தவிர்க்க, என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனை நடவடிக்கைகளையும், மாவட்ட நிர்வாகம் செய்து, மக்களை காக்க வேண்டும்.அந்தந்த மாவட்டத்தில் நோய் தொற்று பரவும் வேகத்தை பொறுத்து, முடிவு எடுக்கும் அதிகாரம் கலெக்டருக்கு உள்ளது.குறைந்தபட்சம் சுழற்சி முறையிலாவது, பணிக்கு வரவழைத்து, கோவையை தொற்றில் இருந்து காப்பாற்ற வேண்டும்.செய்வாரா நம் கலெக்டர்?


FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW

  Join Telegram-   CLICK HERE 


  *இந்த பயனுள்ள தகவலை  உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩

No comments:

Post a Comment

Post Top Ad