தமிழகத்தில் கரோனா பாதித்தோர் குணமடைந்தோர் விவரம் -28.5.2021-மாவட்ட வாரியாக - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, May 28, 2021

தமிழகத்தில் கரோனா பாதித்தோர் குணமடைந்தோர் விவரம் -28.5.2021-மாவட்ட வாரியாக

தமிழகத்தில் கரோனா பாதித்தோர் குணமடைந்தோர் விவரம் -28.5.2021-மாவட்ட வாரியாக
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 75,542 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 31,079 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,09,700 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 2,71,63,743 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கோவிட் உறுதியானவர்களில் 17,504 பேர் ஆண்கள், 13,575 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 11,87,314 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 8,22,348 ஆகவும் அதிகரித்து உள்ளது. 31,255 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,74,539 ஆக உயர்ந்தது.

486 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 224 பேர் தனியார் மருத்துவமனையிலும், 262 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22,775 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.latest tamil news
latest tamil newsNo comments:

Post a Comment

Post Top Ad