தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு இல்லை..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 12, 2021

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு இல்லை..!

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு இல்லை..!தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,21,438 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் தற்போது 31,819 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 165 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 535278 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 525336 பேர்
டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 8262 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் இன்று 298 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 225334 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 219322 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2107 பேர் பலியாகியுள்ளனர்.

செங்கல்பட்டில் இன்று 144 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 159430 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 155762 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2374 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,39,428 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 3,38,29,697 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 3,104 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 24,56,165 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 36 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 33,454 ஆக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad