உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் அதிமுக: ஜூலை 9இல் கூட்டம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 5, 2021

உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் அதிமுக: ஜூலை 9இல் கூட்டம்!

உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் அதிமுக: ஜூலை 9இல் கூட்டம்!


தமிழ்நாட்டில் உள்ள பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் ஒன்பது மாவட்ட ஊரகப் பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இது தொடர்பான வழக்கில் தேர்தல் நடைபெறாத 9 மாவட்ட ஊரகப் பகுதிகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன, திமுக சார்பில் அதன் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளாட்சித் தேர்தல் பற்றி விவாதித்துள்ளது. அதேபோல், பாஜக சார்பிலும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக விவாதிக்க செயற்குழு கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக ஆலோசிக்க வருகிற 9 ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

முன்னதாக, நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சமயத்தில் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று அக்கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். இதனால், இந்த இரு கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுமா என்ற விவாதங்கள் கிளம்பியுள்ள நிலையில், அதிமுக கூட்டம் நடைபெறவுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக கூட்டணியில் பயணித்து வருகிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது அதிமுக - பாஜக கூட்டணிக்குள் சலசலப்புகள் ஏற்பட்டாலும், கூட்டணி இறுதி செய்யப்பட்டு தேர்தலில் களம் கண்டு தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad