தேர்தல் நேரத்தில் அதிமுக பழிவாங்கிடுச்சாம்... இப்போ போய் புலம்பும் ஜான் பாண்டியன்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, July 17, 2021

தேர்தல் நேரத்தில் அதிமுக பழிவாங்கிடுச்சாம்... இப்போ போய் புலம்பும் ஜான் பாண்டியன்!

தேர்தல் நேரத்தில் அதிமுக பழிவாங்கிடுச்சாம்... இப்போ போய் புலம்பும் ஜான் பாண்டியன்!


நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தென்மண்டல தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் தலைவர் ஜான்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது, பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய அரசு தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், இரண்டு மாதங்களில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சார்பில் வாய்ப்புள்ள இடங்களில் போட்டியிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜான்பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியது:

கிறித்தவ மதத்தில் உள்ள தேவேந்திரகுல வேளாளர் சாதிச் சான்று பெறுவதில் உள்ள சிக்கலை தீர்க்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவேந்திரகுல வேளாளர் அரசானணா அறிவிப்பு கரணமாக கடந்த சட்டமன்ற தேர்தலில் 80% அதிகமான தேவேந்திர குல வேளாளர் மக்கள்

அதிமுக பாஜகவிற்கு கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர்.கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தென்மாவட்டத்தில் தொகுதி கேட்டும் கொடுக்காமல், பழிவாங்கும் நோக்கத்தோடு வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு சென்னை எழும்பூர் தொகுதியில் என்னை போட்டியிட வைத்தார்கள். நான் அதிமுகவால் தேர்தல் நேரத்தில் பழிவாங்கும் நடவடிக்கைக்கு ஆளாக்கப்பட்டு திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டேன்.

தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை கொடுத்த காரணத்தற்காக நன்றியுனர்வுடன் இருந்ததால் கூட்டணியில் இருந்து வெளியேறாமல் கொடுத்த தொகுதியில் போட்டியிட்டேன்.

அதிமுக பாஜக வெற்றி பெற தேவேந்திர குல வேளாளர் மக்கள்தான் காரணம். அதேபோன்று நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் ரவீந்திரநாத் வெற்றிபெறவும், கடந்த சட்டமன்ற தேர்தலில் ஓ பன்னீர்செல்வம் வெற்றி பெறவும் தேவேந்திரகுல வேளாளர் மக்களே காரணம்.

No comments:

Post a Comment

Post Top Ad