அது, அரசின் கொள்கை முடிவு - தியேட்டர் பார்க்கிங் கட்டணத்தை உயர்த்த கோரிய வழக்கு தள்ளுபடி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, July 17, 2021

அது, அரசின் கொள்கை முடிவு - தியேட்டர் பார்க்கிங் கட்டணத்தை உயர்த்த கோரிய வழக்கு தள்ளுபடி!

அது, அரசின் கொள்கை முடிவு - தியேட்டர் பார்க்கிங் கட்டணத்தை உயர்த்த கோரிய வழக்கு தள்ளுபடி!


திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணத்தை உயர்த்தக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
திரையரங்க வாகன நிறுத்துமிடங்களில், பார்க்கிங் கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு, கடந்த 2017ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது. அதன்படி மாநகராட்சி பகுதியில் உள்ள திரையரங்க வாகன நிறுத்துமிடங்களில், நான்கு சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாயும், இருசக்கர வாகனங்களுக்கு 10 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டது.

அதே போல, நகராட்சி பகுதி திரையரங்காக இருந்தால் நான்கு சக்கர வாகனங்களுக்கு 15 ரூபாயும், இருசக்கர வாகனங்களுக்கு 7 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டது. கிராம பஞ்சாயத்துகளில் உள்ள திரையரங்க பார்க்கிங்களில், நான்கு சக்கர வாகனங்களுக்கு 5 ரூபாயும், இரு சக்கர வாகனங்களுக்கு 3 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டது.இந்த அரசாணையை ரத்து செய்து, திரையரங்க பார்க்கிங் கட்டணத்தை அதிகரிக்கக் கோரி இளவரசு என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் மஞ்சுளா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தங்கள் தரப்பு கருத்தை கேட்காமலும், நிலத்தின் மதிப்பை கணக்கில் கொள்ளாமலும் அரசு, கட்டணத்தை நிர்ணயித்துள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொண்டு தான், அரசு அரசாணை பிறப்பித்திருப்பதாகக் குறிப்பிட்டனர். மேலும் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றால் அது பொது நலனுக்கு எதிரானது ஆகிவிடும் என்பதாலும், அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்பதையும் கருத்தில் கொண்டு வழக்கை, தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.மேலும், கட்டணத்தை அதிகரிக்க கோரி மனுதாரர் அரசை அணுக இந்த உத்தரவு தடையாக இருக்காது எனவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad