''கொங்குநாடு'' புதிய மாநிலம் வேண்டும்: கோவையில் மீட்டிங் போட்டு பாஜக தீர்மானம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 12, 2021

''கொங்குநாடு'' புதிய மாநிலம் வேண்டும்: கோவையில் மீட்டிங் போட்டு பாஜக தீர்மானம்

''கொங்குநாடு'' புதிய மாநிலம் வேண்டும்: கோவையில் மீட்டிங் போட்டு பாஜக தீர்மானம்


கொங்குநாடு தனி மாநிலமாக உருவாக்க வேண்டும் என கோவை வடக்கு மாவட்ட பாஜக-வினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
பாஜக மாநிலத்தலைவராக பொறுப்பு வகித்த எல். முருகனுக்கு மத்திய அமைச்சர் பொறுப்பும், மாநில துணை தலைவராக பொறுப்பு வகித்த அண்ணாமலைக்கு மாநில தலைவர் பொறுப்பு வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு இந்த செயற்குழு நன்றியை தெரிவித்து கொள்கிறது.

மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசியும், கொரோனா காலத்தில் ஜூன் முதல் தீபாவளி வரை உணவு தானியங்கள் அதிகமாக வழங்கியும் ரூ. 85 ஆயிரம் கோடி செலவில் கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு செயல்வடிவம் கொடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி

மத்திய அரசு இலவசமாக வழங்கும் கொரோனா தடுப்பூசியை தமிழக அரசு சென்னை மண்டலங்களுக்கு அதிகமாக ஒதுக்கீடு செய்தும், கோவை மாவட்டத்திற்கு பாகுபாட்டுடன் குறைவாக ஒதுக்கியதற்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதுடன் கோவை வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பொதுமக்களுக்கும் விரைவாக தடுப்பூசி முகாம் நடத்தி கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என மாநில அரசை செயற்குழு கேட்டுக்கொள்கிறது.மத்திய அரசு தமிழகத்தின் மேற்கு மண்டல மக்களின் சுய கவுரவத்தை பாதுகாக்கவும், வாழ்வாதாரங்களை பாதுகாக்கவும், வளர்ச்சியை ஏற்படுத்தவும் அரசியல் சட்டத்தை பயன்படுத்தி நிர்வாக ரீதியாக தமிழகத்தை மாநில சீரமைப்பு செய்து மேற்கு மண்டலத்தை புதிய மாநிலமாக கொங்குநாடு உருவாக்க வேண்டும் என இந்த செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

நமது தேசிய பக்தி மிக்க உணர்ச்சி முழக்கமான ஜெயஹிந்த்-ஐ திமுகவின் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் இ.ஆர். ஈஸ்வரன் சட்டமன்ற கூட்டத்தில் அவமதித்ததற்கும், அதற்கு உடந்தையாக இருந்த தமிழக அரசிற்கும் இந்த செயற்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது உள்ளிட்ட தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Post Top Ad