நல்லா தந்திருக்காங்க திருமண உதவித் தொகை... அதிமுக அரசை நொந்து கொண்ட திமுக பெண் அமைச்சர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, July 17, 2021

நல்லா தந்திருக்காங்க திருமண உதவித் தொகை... அதிமுக அரசை நொந்து கொண்ட திமுக பெண் அமைச்சர்!

நல்லா தந்திருக்காங்க திருமண உதவித் தொகை... அதிமுக அரசை நொந்து கொண்ட திமுக பெண் அமைச்சர்!

தூத்துக்குடி ,திருநெல்வேலி,தென்காசி,கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், ஆகிய 6-மாவட்டங்களை சேர்ந்த துறை அலுவலர்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜூவன் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்றது

இதில், 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின்கீழ் தாலிக்கு தங்கம் வழங்குதல், தையல் இயந்திரங்கள் அளித்தல், திருநங்கைகளுக்கு உதவி, கொரொனா தொற்றால் தாய், தந்தையை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி உள்ளிட்ட 75-பயனாளிகளுக்கு 22-லட்சத்து 16-ஆயிரத்து 574-ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

கொரோனாவின் விளைவாக தாய் மற்றும் தந்தையை இழ்ந்த குழந்தைகளுக்கு உதவி செய்ய 33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் தென்மாவட்டங்களில் தாய் இழந்த குழந்தைகள் சுமார் 1000-ஆயிரம் பேர் இதுவரை கண்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.தழகத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குழந்தை திருமணம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளை பாதுகாக்க, காவல்துறை மற்றும் சமூகநலத் துறை அலுவலர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற நிகழ்ச்சியின் மூலம் பெறப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆட்சியில் திருமண உதவித்தொகை திட்டம் சரியான முறையில் செயல்படுத்தபடாததால் 3 லட்சத்து 34-ஆயிரத்து 913 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.



நிலுவை விண்ணப்பங்களுக்கு உரிய உதலித்தொகை வழங்க மட்டும் 2-ஆயிரம் கோடிக்கு மேல் தேவைப்படுகின்றது. இப்போது இருக்கும் நிதி சுமையில் இந்த விண்ணப்பங்களின் நடவடிக்கை எடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad