உடம்பில் இருக்கும் மச்சங்களுக்கும் உங்களுடைய மன ஆரோக்கியத்துக்கும் சம்பந்தம் இருக்கிறதாம்... எப்படினு தெரியுமா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 13, 2021

உடம்பில் இருக்கும் மச்சங்களுக்கும் உங்களுடைய மன ஆரோக்கியத்துக்கும் சம்பந்தம் இருக்கிறதாம்... எப்படினு தெரியுமா?

 உடம்பில் இருக்கும் மச்சங்களுக்கும் உங்களுடைய மன ஆரோக்கியத்துக்கும் சம்பந்தம் இருக்கிறதாம்... எப்படினு தெரியுமா?


பொதுவாக ஒருவரின் உடம்பில் இருக்கும் மச்சங்களை வைத்து அதிர்ஷ்ட மச்சங்கள் என்பார்கள். அதுவும் மச்சங்கள் இருக்கும் இடத்தைப் பொருத்து நீங்கள் எப்படிப்பட்ட குணம் உடையவர்கள் எனக் கூறுவதும் உண்டு. அந்த வகையில் மச்சங்கள் நம் உடம்பில் ஒரு முக்கியமான அங்கம் வகிக்கிறது. சிலருக்கு பிறக்கும் போதே மச்சங்கள் காணப்படுவது உண்டு. இதை பிறப்பு அடையாளமாகவும் அதே நேரத்தில் அவர்களின் கடந்த கால வாழ்க்கையுடனும் தொடர்புபடுத்திப் பார்ப்பது உண்டு. மச்சங்கள் வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு நிறத்தில் வெவ்வேறு அளவுகளில் காணப்படுவது உண்டு. மச்சங்கள் என்பது நாம் மறையும் நம்மோடு இருக்கக் கூடியது. இந்த மச்சங்களைக் கொண்டு எப்படி உங்க கடந்த கால வாழ்க்கையை கூற முடியும் வாங்க தெரிஞ்சுக்கலாம். மச்சங்களுக்கும் நம் கடந்த கால வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம் வாங்க அறிவோம்.

​புல்லட் போன்ற மச்சங்கள் :

சிலருக்கு மச்சங்கள் நன்றாக பெரிதாக புல்லட் வடிவில் காணப்படும். இந்த மச்சங்களில் ஏதேனும் சீரற்ற அறிகுறிகள் இருந்தால் அவை புண்களுக்கு வழி வகுக்கலாம். காலப்போக்கில் இந்த மச்சங்கள் பழுப்பு நிறமாக மாற வாய்ப்பு உள்ளது. இந்த மச்சங்களை பார்ப்பதற்கு தூப்பாக்கி சூட்டில் நுழைத்த குண்டு மாதிரி தெரியக் கூடும். இது உங்க போன பிறவியில் நீங்கள் துப்பாக்கி சூட்டில் அடிபட்டு இருந்தீர்கள் என்பதன் அடையாளத்தை காட்டுகிறது. எனவே உங்களுக்கு புல்லட் மாதிரி மச்சங்கள் இருந்தால் அவை போன பிறவியில் உங்களுக்கு நேர்ந்த துப்பாக்கி சூட்டின் அறிகுறியாக இருக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த மச்சங்கள் கருப்பு நிறத்தில் இருக்கும்.

​குத்தப்பட்ட காயம் போன்ற மச்சங்கள் :

உங்க போன பிறவியில் நீங்கள் கடுமையான தாக்குதலால் குத்தப்பட்டு இருந்தால் நீங்கள் இந்த அடையாளத்தை பெற்று இருப்பீர்கள். இந்த மச்சங்கள் சுருண்டு காணப்படும். இந்த அடையாளம் உங்க கண்ணின் அருகில் காணப்பட்டால் கத்தி உங்கள் கண் வழியாக நேரடியாக ஊடுருவிக்கலாம். இது ஒரு வரலாற்று சம்பவமாக இருந்து இருக்கலாம். உதாரணமாக ரோம் சர்வாதிகாரி ஜூலியஸ் சீசரின் கதையை நினைவில் கொள்ளுங்கள். அவர் தனது உண்மையான நண்பர் புருட்டஸால் குத்தப்பட்டார்.


​விஷ அம்பு போன்ற அடையாளம் :

உங்க நொற்றியில் சிவப்பு பழுப்பு நிற புள்ளி இருந்து அதைச் சுற்றி நிறமற்ற வளையம் போன்ற அமைப்பு இருந்தால் அது ஒரு விஷ அம்பின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. போன பிறவியில் உங்களை விஷ அம்பு தாக்கி இருக்கலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad