"எனக்கெதிராக பேசுவோரை இந்த கட்சி ஊக்குவிக்கிறது!" - ஒன்றிய அமைச்சர் குற்றச்சாட்டு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, August 29, 2021

"எனக்கெதிராக பேசுவோரை இந்த கட்சி ஊக்குவிக்கிறது!" - ஒன்றிய அமைச்சர் குற்றச்சாட்டு!

"எனக்கெதிராக பேசுவோரை இந்த கட்சி ஊக்குவிக்கிறது!" - ஒன்றிய அமைச்சர் குற்றச்சாட்டு!

தனக்கெதிராக பேசுவோரை சிவசேனா கட்சி ஊக்குவிப்பதாக ஒன்றிய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சர்
நாராயண் ரானே குற்றம் சாட்டி உள்ளார்.

அண்மையில், மஹாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய பா.ஜ.க., வைச் சேர்ந்த ஒன்றிய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சர் நாராயண் ரானே, மஹாராஷ்டிர மாநில முதலமைச்சரும், சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்து இருந்தார்.

இது குறித்து, சிவசேனா கட்சியினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ரத்னகிரி மாவட்டத்தில், ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானேவை அதிரடியாக கைது செய்தனர். இந்த வழக்கில் ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானேவுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.

இந்நிலையில், சிந்துதுர்க் என்ற இடத்தில், ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானே செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தனக்கு எதிராக பேசுவோரை சிவசேனா கட்சி ஊக்குவிக்கிறது. மக்கள் ஆசிர்வாதம் யாத்திரை நிகழ்ச்சியில், கெட்ட சகுனம் போல் ஒரு நிகழ்வு நடைபெற்றது. இந்த யாத்திரையை சீர்குலைக்க சிலர் முயற்சி செய்து வருகின்றனர். இங்குள்ள அமைச்சர்கள் சிலர், தங்களை குடியரசுத் தலைவர் போல் நினைத்துக் கொண்டு என்னை கைது செய்ய உத்தரவிடுகின்றனர். அவர்கள் என்ன செய்தாலும் நம்மை வீழ்த்த முடியாது.

மஹாராஷ்டிர மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஒன்றிய பா.ஜ.க. அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துச் சொல்வேன். இந்தப் பணியை எந்த இடையூறு வந்தாலும் செய்து முடிப்பேன். சிவசேனா கட்சியில் இருந்து பா.ஜ.க.,வுக்கு வர விருப்பம் உள்ளவர்களை முழு மனதுடன் வரவேற்கிறோம்.

No comments:

Post a Comment

Post Top Ad