ரேஷன் ஊழியருக்கு 25 லட்ச ரூபாய்; நிவாரணம் வழங்கும் தமிழக அரசு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 25, 2021

ரேஷன் ஊழியருக்கு 25 லட்ச ரூபாய்; நிவாரணம் வழங்கும் தமிழக அரசு!

ரேஷன் ஊழியருக்கு 25 லட்ச ரூபாய்; நிவாரணம் வழங்கும் தமிழக அரசு!

தமிழகத்தில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மலிவு விலையில் மளிகைப் பொருட்கள் பெறும் வண்ணம் நியாய விலைக் கடைகள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. 39 மாவட்டங்களில் மொத்தம் 34,773 நியாய விலைக் கடைகள் இயங்கி வருகின்றன. இதற்காக 243 கிடங்குகளும், 309 மண்ணெண்ணெய் பங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 2.18 கோடி ரேஷன் அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் 6.90 கோடி பேர் பயனடைந்து வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவலானது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது.


சோகத்தில் குடும்பத்தினர்

முதல் அலையை விட இரண்டாவது அலையில் ஏராளமான உயிரிழப்புகள் பதிவாகின. இதையொட்டி கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும், நியாய விலைக் கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வந்தன. இதற்காக தங்கள் உயிரையும் பணயம் வைத்து ஊழியர்கள் பணிபுரிந்தனர். அதில் சில ஊழியர்கள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். இதன் காரணமாக சம்பந்தப்பட்ட ஊழியர்களின் குடும்பங்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளன.

நிவாரணம் அளிக்கும் தமிழக அரசு

பொருளாதார ரீதியாகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த ரேஷன் ஊழியர்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 25 லட்ச ரூபாய் வழங்க கூட்டுறவுத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக உயிரிழந்த நியாய விலைக் கடை ஊழியரின் பணியில் ஈடுபட்ட சான்று, இறப்பு சான்று, கொரோனா தொற்றால் இறந்ததற்கான மருத்துவ சான்று உள்ளிட்ட ஆவணங்கள் தேவை.

வாரிசு வேலை வேண்டும்

இந்த விவரங்களை சேகரித்து அனுப்புமாறு மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் நடவடிக்கை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சற்றே ஆறுதலை அளிக்கும் வகையில் இருக்கும் என்று நம்பப்படுகிறது. இதுதொடர்பாக பேசிய அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன், எங்கள் ஊழியர்கள் உயிரை பணயம் வைத்து வேலை செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad