அரசு ஊழியர்களுக்கு ஷாக்; வேலையை விட்டுட்டு போயிடுங்க - முக்கிய எச்சரிக்கை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 9, 2021

அரசு ஊழியர்களுக்கு ஷாக்; வேலையை விட்டுட்டு போயிடுங்க - முக்கிய எச்சரிக்கை!

அரசு ஊழியர்களுக்கு ஷாக்; வேலையை விட்டுட்டு போயிடுங்க - முக்கிய எச்சரிக்கை!

உலகின் பல்வேறு நாடுகளில்

கொரோனா வைரஸின் ஆட்டம் இன்னும் அடங்கவில்லை. இதன் பரவலை தடுக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை விரைவுபடுத்த தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான முக்கியத்துவத்தை இரண்டாவது, மூன்றாவது அலைகள் நன்றாகவே எடுத்துக் காட்டியுள்ளன. தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே நாட்டைப் பொறுத்தவரை தற்போது கொரோனாவின் மூன்றாவது அலையை எதிர்கொண்டு வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு தினசரி நோய்த்தொற்று புதிய உச்சம் தொட்டு அந்நாட்டு மக்களை அதிர்ச்சியடையச் செய்தது.

கொரோனா பாதிப்பு நிலவரம்

கடந்த ஜூலை மாதத்தின் மத்தியில் தினசரி பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டிய நிலையில், அதன்பிறகு படிப்படியாக குறைந்து 200க்கும் கீழ் வந்துள்ளது. நேற்றைய தினம் புதிதாக 135 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 1.26 லட்சத்தை தாண்டியிருக்கிறது. 14 பேர் பலியாகி இருக்கின்றனர். இதனால் மொத்த உயிரிழப்புகள் 4,517ஆக உயர்ந்துள்ளன. மொத்தமுள்ள 15 மில்லியன் மக்கள்தொகையில் 2.7 மில்லியன் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

அரசின் தடுப்பூசி திட்டம்

நடப்பாண்டின் இறுதிக்குள் மொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒருபங்கு பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியுடைய 12 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போட சீனாவில் இருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய ஜிம்பாப்வே அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மிகப்பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அதிபர் எமர்சன் மாங்க்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில் கொரோனாவை விரட்டி அடிக்கும் முயற்சியாக தடுப்பூசி விவகாரத்தில் அந்நாட்டு அரசு கெடுபிடி காட்டத் தொடங்கியுள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

அதாவது, தடுப்பூசி கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. அதற்காக அரசுப் பணியில் இருப்பவர்களும் அலட்சியம் காட்டினால் எப்படி? மற்றவர்களின் நலனுக்காக அரசு ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதே அரசின் விருப்பம். ஒருவேளை தடுப்பூசி செலுத்துவதும், செலுத்தாததும் எங்கள் விருப்பம் என்று பேசினால் நீங்கள் அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு செல்வதே நல்லது

No comments:

Post a Comment

Post Top Ad