தமிழகத்தில் அடங்க மறுக்கும் கொரோனா - இன்றைய நிலவரம்..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 25, 2021

தமிழகத்தில் அடங்க மறுக்கும் கொரோனா - இன்றைய நிலவரம்..!

தமிழகத்தில் அடங்க மறுக்கும் கொரோனா - இன்றைய நிலவரம்..!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,724 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.


தமிழக சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 1 ஆயிரத்து 724 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 985 பேர் ஆண்கள், 739 பேர் பெண்கள். இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 55 ஆயிரத்து 572 ஆக அதிகரித்து உள்ளது.

தலைநகர் சென்னையில், இன்று ஒரே நாளில், 194 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், 198 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 22 பேர் உயிரிழந்து உள்ளனர். 8 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 14 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்து உள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 476 ஆக அதிகரித்து உள்ளது.

இன்று மட்டும் 1 ஆயிரத்து 635 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 2 ஆயிரத்து 833 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, மாநிலம் முழுவதும், 17 ஆயிரத்து 263 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad