முதல்வர் ஸ்டாலினின் ஃபிட்னஸ் ரகசியம்; வெளியான புதிய வீடியோ! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 25, 2021

முதல்வர் ஸ்டாலினின் ஃபிட்னஸ் ரகசியம்; வெளியான புதிய வீடியோ!

முதல்வர் ஸ்டாலினின் ஃபிட்னஸ் ரகசியம்; வெளியான புதிய வீடியோ!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் நடந்த சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. முதல்வராவதற்கு முன்பாகவும், அதன் பின்பும் உடல் ஆரோக்கியத்தில் ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி வருகிறார்.
தனது வீட்டிலேயே அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தில் பல்வேறு விதமான பயிற்சிகளில் ஈடுபடுவது, காலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்வது, சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை குறிப்பிட்ட தூரம் சைக்கிளிங் செய்வது உள்ளிட்ட விஷயங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
வாரத்தில் மூன்று நாட்கள் காலை வேளையில் சுமார் 20 முதல் 30 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஸ்டாலின் சைக்கிள் பயணம் செய்யும் போது, அவரது மருமகன் சபரீசன் தவறாமல் உடன் சென்று விடுவார். செல்லும் வழியில் ஸ்டாலினை பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் கண்டு ரசிப்பர்.

No comments:

Post a Comment

Post Top Ad