துரைமுருகனை ஆப் செய்த எம்எல்ஏ; பாட்டு பாடி சட்டசபையில் கலகலப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 6, 2021

துரைமுருகனை ஆப் செய்த எம்எல்ஏ; பாட்டு பாடி சட்டசபையில் கலகலப்பு!

 துரைமுருகனை ஆப் செய்த எம்எல்ஏ; பாட்டு பாடி சட்டசபையில் கலகலப்பு!
தமிழக அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவரும், சட்டமன்றத்தில் மிகவும் மூத்த உறுப்பினருமான துரைமுருகனை திமுக எம்எல்ஏ ஒருவரே தனது பேச்சு திறமையால் ஆப் செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. திமுக எம்எல்ஏவின் புத்திக்கூர்மையை அவை மாற்று தலைவர், அதிமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் வியந்து பார்த்தனர்.தமிழக அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவரும், சட்டமன்றத்தில் மிகவும் மூத்த உறுப்பினருமான துரைமுருகனை திமுக எம்எல்ஏ ஒருவரே தனது பேச்சு திறமையால் ஆப் செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. திமுக எம்எல்ஏவின் புத்திக்கூர்மையை அவை மாற்று தலைவர், அதிமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் வியந்து பார்த்தனர்.தமிழக அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர் அமைச்சர் துரைமுருகன். தமிழக சட்டமன்றத்தில் மிகவும் மூத்த உறுப்பினராகவும் உள்ளார். அமைச்சர் துரைமுருகனின் நகைச்சுவையான பேச்சை எதிர்க்கட்சியினரும் ரசித்து கேட்பர்.

சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் கூட சட்டசபையில், மூத்த உறுப்பினர் துரைமுருகன் சிரிக்க வைக்கனும்னா சிரிக்க வைப்பார்... அழ வைக்கனும்னா அழ வைப்பார்... சிந்திக்க வைக்கனும்னா சிந்திக்க வைப்பார்..’ என்று வெகுவாக புகழ்ந்து பேசி இருந்தார்.

திமுக ஆளும்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் சட்டசபையை உயிரோட்டமாக வைத்திருப்பதில் சபாநாயகருக்கு அடுத்தபடியாக அமைச்சர் துரைமுருகனின் பங்கு பெரிது எனவும் கூற முடியும்.அந்தளவுக்கு எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்ற முன்னாள் முதலமைச்சர்களுடன் நட்புறவு கொண்டு இருந்த துரைமுருகன் அரசியலில் நுணக்கங்களையும் நன்றாக அறிந்து வைத்திருப்பவர்.

அப்படிப்பட்ட துரைமுருகனையே ஆய் செய்யும் அளவுக்கு தமிழக சட்டசபையில் திமுக எம்எல்ஏ பேசிய விதம் திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்லாமல் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்களையும் கூட வியப்பில் ஆழ்த்தியது.

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் மானிய கோரிக்கை விவாதத்தின்போது நேற்று ராயபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி கோரிக்கைகள் குறித்து பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென எம்ஜிஆர் பாடலான, “எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே... நம் நாட்டிலே... நாட்டிலே...சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்... சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார் ” என்ற பாடலை பாடி 25 ஆண்டாக ராயபுரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஒருவரை பற்றியது தான் இந்த பாடல் என்று தெரிவித்தார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக எம்எல்ஏக்கள் சபையில் இல்லாத ஒருவரை பற்றி பேசக்கூடாது என்று கூறி அமளியில் ஈடுபட்டனர். இதற்கு பதில் அளித்து பேசிய அவை முன்னவர் துரைமுருகன், அவையில் இல்லாதவர் பெயரை அவையில் குறிப்பிடக் கூடாது. அப்படி அவர் பெயரை தெரிவித்து இருந்தால் உடனே அவை குறிப்பில் இருந்து நீக்கி விடுங்கள் என்றார்.
இதை கேட்ட திமுக எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி, ‘பொதுவாக ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் என்று தான் கூறினேன். அவையில் இல்லாத எந்த உறுப்பினர் பெயரையும் நான் குறிப்பிடவில்லை என்று கூறினார்.இதனை சற்றும் எதிர்பாராத அவை மாற்றுத்தலைவர் மற்றும் அவை முன்னவர் துரை முருகன் உள்ளிட்டோர் திமுக எம்எல்ஏவின் புத்தி கூர்மையை கண்டு வியந்து, அமைதி காத்தனர். இதை தொடர்ந்து திமுக எம்எல்ஏ ஐட்ரீம்ஸ் மூர்த்தி தனது பேச்சை தொடர்ந்தார்.


No comments:

Post a Comment

Post Top Ad