மாணவியின் ஆடை குறித்து கேள்வி, கஸ்தூரியை விளாசும் நெட்டிசன்ஸ்..! என்னாச்சு? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 18, 2021

மாணவியின் ஆடை குறித்து கேள்வி, கஸ்தூரியை விளாசும் நெட்டிசன்ஸ்..! என்னாச்சு?

மாணவியின் ஆடை குறித்து கேள்வி, கஸ்தூரியை விளாசும் நெட்டிசன்ஸ்..! என்னாச்சு?

நடிகை கஸ்தூரி ட்விட்டரில் சமூக கருத்துக்கள், அரசியல் விமர்சனங்கள் மற்றும் மொழி சம்மந்தமான கருத்துக்களை அன்றாடம் பகிர்ந்து வருகிறார். இவர் போடும் ட்வீட்டுக்கு பலரும் கருத்துக்களையும், விமர்சனங்களையும் தெரிவித்து வருவது வழக்கம். அந்த வகையில் பல சர்ச்சையான கேள்விகளுக்கும் இவர் பதிலடி கொடுத்து ட்வீட் போட்டும் வருகிறார். இந்நிலையில், சிவசேனா கட்சியின் ராஜ்யசபா உறுப்பினரான பிரியங்கா சதுர்வேதி ஒரு சம்பவத்தை கண்டித்து ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்வீட்டில், ஒரு 19 வயது பெண் பல்கலைக்கழக நுழைவு தேர்வு எழுத 3 நேரம் 70 கிமீ பயணம் செய்துள்ளார். அவர் அனைத்து ஆவணங்களையும் வைத்திருந்தார். ஆனால், அந்த மாணவி ஷார்ட்ஸ் அணிந்திருந்ததால் தேர்வு மையத்திற்குள் நுழைய அவரை அனுமதிக்கவில்லை. அந்த மாணவியை தேர்வு எழுத அனுமதிக்க புடவை அணிய வேண்டுமா? இந்த அவமானம் மற்றும் பாகுபாடு ஒருபோதும் முடிவுக்கு வராதா?'' என இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். அதற்கு 1500 பேர் ரீ ட்வீட் செய்துள்ளனர். 8 ஆயிரம் லைக்குகள் வந்துள்ளன.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி போட்ட ஒரு ட்வீட் இப்போது சர்ச்சையாகியுள்ளது. அப்படி என்ன அவர் கூறியிருந்தார் என்றால்; ''தேர்வுக்கு பொருத்தமான ஆடையை அணிந்து செல்ல அந்த மாணவிக்கு 30 வினாடிகள் கூட இல்லையா?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார். கஸ்தூரியின் இந்த ட்வீட்டை விமர்சிக்கும் சிலர், உங்களது சிந்தனை ஏன் இவ்வளவு வீக்காக உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

என்ன நடந்தது?

அசாம் வேளாண் பல்கலைக்கழகத்தில் (AAU) நுழைவுத் தேர்வு எழுத 19 வயதான ஜூப்லி தமுலி என்ற மாணவி சென்றுள்ளார். மாணவி தன்னுடைய தந்தையுடன் அவருடைய சொந்த ஊரான பிஸ்வநாத் சாரியாலியிலிருந்து 70 கிமீ தொலைவில் உள்ள தேஜ்பூருக்கு 3 மணி நேரம் பயணித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த மாணவி கேம்பஸுக்குள் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஷார்ட்ஸ் அணிந்திருந்தை சுட்டிக்காட்டி தேர்வு கண்காணிப்பாளர் அவரை தடுத்தி நிறுத்தியுள்ளார். பின்னர் கடும் வாக்குவாதத்திற்கு பின்னர் அவர் தேர்வு எழுதிவிட்டு சென்றார். இதுகுறித்து அவர் கூறுயதாவது, ஹால்டிக்கெட்டில் உடை குறித்து எந்த விதிமுறையும் குறிப்பிடப்படவில்லை. ஒரு ஆண் எந்த உடையை அணிந்தாலும், யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். சில ஆண்கள் பொது இடங்களில் வெறும் உடலுடன் சுற்றி வருகிறார்கள். ஆனால் ஒரு பெண் ஷார்ட்ஸ் அணிந்தால், அதை பிரச்சினையாக பார்க்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு, நான் இதே உடையில்தான் நீட் தேர்வுக்கு வந்தேன். அப்போது யாரும் தடுக்கவில்லை. மன அழுத்தத்துடன் நான் இந்த தேர்வை எழுதியுள்ளேன்'' என இவ்வாறு ஜூப்லி தமுலி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad