இடைத்தேர்தலில் மம்தாவிற்கு தோல்வி உறுதி; ஷாக் கொடுத்த பாஜக! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 6, 2021

இடைத்தேர்தலில் மம்தாவிற்கு தோல்வி உறுதி; ஷாக் கொடுத்த பாஜக!

இடைத்தேர்தலில் மம்தாவிற்கு தோல்வி உறுதி; ஷாக் கொடுத்த பாஜக!


பவானிபூர் இடைத்தேர்தலில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தோல்வியை தழுவுவார் என்று பாஜக குறிப்பிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விதம் சரிதானா?

இந்தியாவிலும் தாலிபான்கள்?
மேற்குவங்க மாநிலத்தில் கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் 8 கட்டங்களாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. ஆனால் நந்திகிராம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி தோல்வியை தழுவினார். அவரது முன்னாள் நண்பரும், தேர்தலுக்கு முன்பு பாஜக இணைந்தவருமான சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார். இருப்பினும் மேற்குவங்க முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்றுக் கொண்டார். இந்த தேர்தலில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 77 தொகுதிகளில் வென்று தனது வளர்ச்சியை நிரூபித்துக் காட்டியது.

விட்டுக் கொடுத்த சோபன்தேப்

தேர்தல் ஆணைய விதிமுறைகளின் படி, தேர்தலில் வெற்றி பெறாமல் பதவியேற்றுக் கொள்பவர்கள் அடுத்த 6 மாதத்திற்குள் எம்.எல்.ஏவாக வேண்டும். இல்லையெனில் தங்களது பதவியை இழக்க நேரிடும். வழக்கமாக கட்சி தலைவருக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் எம்.எல்.ஏக்கள் யாராவது தங்கள் பதவியை ராஜினாமா செய்வர். அந்த வகையில்  பவானிபூர் தொகுதியில் வெற்றி பெற்ற சோபன்தேப் சட்டோபாத்யாய் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.இடைத்தேர்தலில் களமிறங்கும் மம்தா

இந்த தொகுதியுடன் சம்செர்கஞ்ச், ஜங்கிபூர் ஆகிய மூன்று தொகுதிகளில் வரும் 30ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 3ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இந்நிலையில் பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மீண்டும் தோல்வி தான் - பாஜக

மேற்குவங்க சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பலரும் பாஜகவிற்கு தாவினர். மம்தா பானர்ஜி தலைமையில் புதிய ஆட்சி அமைந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில், பாஜகவில் இருந்து எம்.எல்.ஏக்கள் பலரும் திரிணாமூல் காங்கிரஸில் இணைந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் பாஜக ஐடி பிரிவின் தலைவர் அமித் மாள்வியா தனது ட்விட்டரில்,
பவானிபூர் தொகுதியை  கைவிட்டு விட்டு, சுவேந்து அதிகாரியிடம் தோல்வியை தழுவுவதற்காகவே நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். அப்படியிருக்கையில் மீண்டும் பவானிபூர் தொகுதியில் எப்படி வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறார்? நந்திகிராம் தொகுதியில் மம்தாவிற்கு கிடைத்த அதே தோல்வியை பவானிபூரிலும் மக்கள் பரிசளிப்பார்கள். அங்கு பாஜக நிச்சயம் வெல்லும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் மேற்குவங்க அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad