அவங்களுக்கு ஒரே பயம், எங்களுக்கு அப்படி இல்லை: அன்பில் மகேஷ் பேச்சு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 28, 2021

அவங்களுக்கு ஒரே பயம், எங்களுக்கு அப்படி இல்லை: அன்பில் மகேஷ் பேச்சு!

அவங்களுக்கு ஒரே பயம், எங்களுக்கு அப்படி இல்லை: அன்பில் மகேஷ் பேச்சு!

தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்டிருக்கும் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளன. தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
ஜனவரி மாதத்துக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையும் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்நிலையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து அனல் பறக்க பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், விழுப்புரம் அருகே வளவனூர் அடுத்த நரையூர் கிராமத்தில் போட்டியிடும் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “தேர்தலின் போது கொடுத்த 500 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம். பெண்களுக்கு பேருந்தில் இலவசம் என்று அறிவித்ததோடு அந்த அறிவிப்பை முதல்வர் உடனடியாக நிறைவேற்றி வைத்தார். திமுக அரசாங்கம் அமைய காரணமாக இருந்த மக்களின் தேவை அறிந்து திட்டங்களை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளார்.

எனவே மக்களின் பிரச்சனையை அறியவே நேரில் வந்து கொண்டிருக்கிறோம். இனியும் வருவோம். கடந்த கால ஆட்சியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக பயந்தது. மக்களின் தேவைகளை நிறைவேற்ற உள்ளாட்சி அமைப்புகள் மிக முக்கியமானது” என்று பேசினார்.

No comments:

Post a Comment

Post Top Ad