அமைச்சர் புதுக்கதை விடுகின்றார் - எம்.ஆர்.விஜயபாஸ்கர் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 30, 2021

அமைச்சர் புதுக்கதை விடுகின்றார் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அமைச்சர் புதுக்கதை விடுகின்றார் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்


நம்ம ஊரு அமைச்சர் அணில் வந்திருச்சு என்று மின்சாரத்தில் புதுக்கதை விடுகின்றார் – மேலும் ரூ 12110 கோடியை பயிர்க்கடனாக கொடுத்திருந்தோம் அதிமுக ஆட்சியில், ஆனால் தற்போதைய திமுக ஆட்சியில் என்ன நிலைமை என்று பார்க்க வேண்டும் 51 நிபந்தனைகளை விதித்துள்ளார்கள் கரூர் அருகே முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி குற்றச்சாட்டுகரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உப்பிடமங்கலம் அருகே உள்ள பால்வார்ப்பட்டி, ஜெகதாபி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் 8 வது வார்டு பதவிக்கு போட்டியிடும் தானேஷ் முத்துக்குமாருக்கு ஆதரவாக அதிமுக சின்னத்திற்கு கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வழிநெடுகிலும் பட்டாசுகள் வெடித்தும் ஆரத்திகள் எடுத்தும் வேட்பாளருக்கும், மாவட்ட அதிமுக செயலாளருக்கும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், நமது அதிமுக ஆட்சியில் எந்த நிபந்தனைகளும் இல்லாமல் ரூ 12 ஆயிரத்து 110 கோடியை பயிர்க்கடனாக தள்ளுபடி செய்துள்ளோம், ஆனால் தற்போது வந்துள்ள திமுக அரசானது நகைக்கடன் தள்ளுபடி விஷயத்தில் 51 நிபந்தனைகளை விதித்துள்ளது. இது எப்படி உள்ளது என்று நீங்களே எண்ணிப்பாருங்கள் என்றதோடு, தற்போதைய மின்சாரக்கட்டணம் என்பது நினைத்து கூட பார்க்க முடியவில்லை காரணம், கடந்த நமது அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட 100 யுனிட் மின்சாரத்தினை கட் செய்து விட்டு விண்ணை தொடும் அளவிற்கு மின் கட்டணம் உயர்ந்து வருகின்றது. அதே போல தான் மின்நிறுத்தம் அவ்வப்போது கட் ஆகின்றது, காரணம் நம்ம ஊரு அமைச்சர் அணில் கதையை சொல்லி வருகின்றார் என்றும், ஆகவே கடந்த 6 மாதங்களில் மக்கள் அனுபவித்து வரும் துன்பங்களை நினைத்து பார்த்து நமது மக்கள் வாக்களிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad