யார் அந்த மூன்று முன்னாள் அமைச்சர்கள்? பழனிவேல் தியாகராஜன் பகீர் குற்றச்சாட்டு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 16, 2021

யார் அந்த மூன்று முன்னாள் அமைச்சர்கள்? பழனிவேல் தியாகராஜன் பகீர் குற்றச்சாட்டு!

யார் அந்த மூன்று முன்னாள் அமைச்சர்கள்? பழனிவேல் தியாகராஜன் பகீர் குற்றச்சாட்டு!

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதில், இத்திட்டம் தொடர்பாக விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த பழனிவேல் தியாகராஜன், “சட்டப்படி நடக்க வேண்டிய ஸ்மார்ட் சிட்டி திட்டம் இன்று நடக்கிறது. பல ஆண்டுகளாக இந்தக் கூட்டம் நடக்காமல் இருந்தது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த தனித் தலைவர் இருக்க வேண்டும். அதேபோல், மக்கள் பிரதிநிதிகள் இருக்க வேண்டும். கவுன்சிலர்கள் ஏற்கெனவே இல்லை. எம்எல்ஏக்களையாவது அழைத்து ஆலோசித்து இருக்க வேண்டும். ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில் அவர்கள் கட்சி எம்எல்ஏக்களிடம் கூட, இந்தத் திட்டத்திற்கான ஆலோசனைகளைக் கேட்கவில்லை” என்றார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் அனைத்தும் தவறாக ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், மூன்று முன்னாள் அமைச்சர்களின் சம்பாதிப்பதற்காகவும், அவசர அவசரமாக ஊழல் செய்வதற்காகவும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. எந்தத் துறையில், எப்படிக் கூடுதலாக ஊழல் செய்யலாம் என்ற அடிப்படையிலேயே ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.


இத்திட்டத்தில் அனைத்துக் கட்டிடங்களும், சாலைகளும் தரமற்று உள்ளன. ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடங்கியுள்ளதில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்து நிதித் தணிக்கை செய்ய வேண்டும். இதில் அதிகாரிகள் மீதான முறைகேடு குறித்து ஆதாரம் இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையடுத்து, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டிய அந்த மூன்று அமைச்சர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக ஆட்சியில் மதுரையில் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு ஆகியோர் இருந்தனர். அவர்களையும், துறை சார்ந்த அமைச்சரையும் சேர்த்துத்தான் 3 பேர் என்று குற்றம் சாட்டுகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad