நவம்பர் 1ல் கோயம்பேடு, வேளச்சேரி மேம்பாலங்கள் திறப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, October 29, 2021

நவம்பர் 1ல் கோயம்பேடு, வேளச்சேரி மேம்பாலங்கள் திறப்பு!

நவம்பர் 1ல் கோயம்பேடு, வேளச்சேரி மேம்பாலங்கள் திறப்பு!

தற்போது வரும் நவம்பர் 1 ஆம் தேதி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சென்னை கோயம்பேடு, வேளச்சேரி மேம்பாலங்களை திறந்து வைக்கிறார். 

 
தமிழக தலைநகரான சென்னை தொழில்துறை நகரமாகவும் இருப்பதால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சென்னையின் முக்கியமான பல பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
 
இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் போது சென்னை கோயம்பேடு மற்றும் வேளச்சேரியில் மேம்பாலங்கள் கட்டும் பணிகளுக்கு இதி ஒதுக்கப்பட்டு  அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த பணிகள் தற்போது முடிந்துள்ளது. 
 
இதனால் தற்போது வரும் நவம்பர் 1 ஆம் தேதி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சென்னை கோயம்பேடு, வேளச்சேரி இரண்டடுக்கு மேம்பாலம் ஆகிய இரு புதிய மேம்பாலங்களை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கிறார். 
 
மேலும் திமுக ஆட்சிக்கு வந்ததும் மூன்று இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதன்படி, வியாசர்பாடி ஜீவா ரயில் நிறுத்தம் அருகே கணேசபுரத்தில்  4  வழி மேம்பாலம், தியாகராயர் நகர் உஸ்மான் சாலையில் இருந்து அண்ணா சாலை வரை 2 வழி மேம்பாலம், ஓட்டேரி நல்லா அருகே 2 வழி மேம்பாலம் கட்டப்படவுள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad