சடலமாக தொங்கிய மூன்று பெண்கள்… கோவில்பட்டியில் அதிர்ச்சி சம்பவம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, October 9, 2021

சடலமாக தொங்கிய மூன்று பெண்கள்… கோவில்பட்டியில் அதிர்ச்சி சம்பவம்!

சடலமாக தொங்கிய மூன்று பெண்கள்… கோவில்பட்டியில் அதிர்ச்சி சம்பவம்!


கோவில்பட்டி தாய் மற்றும் இரு மகள்கள் தூக்கில் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்துமாரி. கூலித்தொழிலாளியான் இவர் தனது கணவரை பிரிந்து தனது இரு மகள்களான யுவராணி மற்றும் நித்யா ஆகியோரோடு வசித்து வருகிறார். இந்நிலையில் முத்துமாரிக்கும் அவரது சகோதரரான ஆண்டவர் என்பவருக்கும் குடும்ப சொத்து காரணமாக பிரச்சனை ஏற்பட்டு அடிக்கடி இருவரும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று முத்துமாரியின் வீட்டுக்கு அவரது தாயார் வந்து பார்த்த போது வீடு பூட்டப்பட்டு இருந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்ததால் அவர் சந்தேகமடைந்து அக்கம்பக்கத்தினரை அழைத்து பூட்டை உடைக்க சொல்லியுள்ளார். பூட்டை உடைத்து உள்ளே சென்றதில் மகள்கள் வீட்டின் முன்பகுதியில் தூக்கில் தொங்கியவாறு சடலமாகவும், முத்துமாரி சமையலறையில் சடலமாகவும் கிடந்துள்ளனர். இதையடுத்து போலிஸாருக்கு தகவல் சொல்லப்பட்டு அவர்கள் உடல்களைக் கைப்பற்றியுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad