துரைமுருகனே யார் துரோகி? அதிமுகவினர் போஸ்டரால் பரபரப்பு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, October 5, 2021

துரைமுருகனே யார் துரோகி? அதிமுகவினர் போஸ்டரால் பரபரப்பு

துரைமுருகனே யார் துரோகி? அதிமுகவினர் போஸ்டரால் பரபரப்பு

எம்.ஜி.ஆரை துரோகி என விமர்சித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு எதிராக அதிமுகவினர் மதுரையில் போஸ்டர். 
 
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீட் கிடைக்காத திமுகவினரை தேற்றும் விதமாக ஒரு கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், 
 
சீட் கிடைக்கவில்லை என யாரும் வருத்தப்பட வேண்டாம். சீட் கிடைக்காதவர்களுக்கு அடுத்து வரும் கூட்டுறவு சங்கம், ஆவீன் சங்கம் போன்றவற்றில் பதவிகள் கிடைக்கும். ஆனால் யாரும் கட்சிக்கு துரோகம் செய்யவேண்டும் என்று மட்டும் நினைக்காதீர்கள். 
 
அப்படி நினைத்தால் யாராக இருந்தாலும் நான் கட்டம் கட்டிவிடுவேன். திமுக எத்தனையோ துரோகிகளை பார்த்துள்ளது. அண்ணா காலத்தில் சம்பத், பிறகு கலைஞர் காலத்தில் எம்.ஜி.ஆர் ஆகியோர் என அனைவரையும் நாங்கள் பார்த்திருக்கிறோம் எனப் பேசினார். 
 
இதனிடையே எம்.ஜி.ஆரை துரோகி என விமர்சித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு எதிராக அதிமுகவினர் மதுரையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், துப்பாக்கி குண்டை தொண்டையில் தாங்கி இரத்தம் சிந்தி திமுகவை அரியணையில் அமர்த்தியவர் எம்ஜிஆர். அண்ணாவின் மறைவிற்க ு பின் கருணாநிதியை முதல்வராக்கியவர், கடனில் இருந்த கருணாநிதி குடும்பத்திற்கு சம்பளம் வாங்காமல் எங்கள் தங்கம் படத்தில் நடித்து கொடுத்தவர். 
 
துரை முருகனை தன் சொந்த செலவில் எம்.ஏ.பி.எல் படிக்க வைத்தவர், ரத்தக்கொதிப்பால் சட்டமன்ற வளாகத்தில் மயங்கி விழுந்த துரைமுருகனை மடியில் கிடத்தி முதலுதவி செய்து காப்பாற்றியவர் என குறிப்பிட்டுள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad