தேர்தலில் அதிமுக படுதோல்வி: ஓபிஎஸ் - இபிஎஸ் கூட்டறிக்கை - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, October 13, 2021

தேர்தலில் அதிமுக படுதோல்வி: ஓபிஎஸ் - இபிஎஸ் கூட்டறிக்கை

தேர்தலில் அதிமுக படுதோல்வி: ஓபிஎஸ் - இபிஎஸ் கூட்டறிக்கை


ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் இணைந்து ஊரக உள்ளாட்சித் தேர்லில் ஏற்பட்ட தோல்வி குறித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் இணைந்து ஊரக உள்ளாட்சித் தேர்லில் ஏற்பட்ட தோல்வி குறித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஒன்றிய கவுன்சிலர்கள் தேர்தலில் திமுக கூட்டணி 980 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி
197 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. பாமக 34 இடங்களில் வென்றுள்ளது. பிற கட்சிகள் 92 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். அமமுக 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

திமுக கூட்டணி, மாவட்ட ஊராட்சிக் குழுவில், 138 இடங்களிலும், ஒன்றியக் குழுவில் 1011 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி மாவட்ட ஊராட்சிக் குழுவில், 2 இடங்களிலும், ஒன்றியக் குழுவில்210 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மற்றகட்சிகள் ஒன்றியக் குழுவில் 145 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஒபிஎஸ்.இபிஎஸ் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், அதிமுக தொண்டர்கள் மீது பொய் வழக்குகள் தொடுத்து தேர்தல் பணி செய்யவிடாமல் தடுத்தனர். 2 கட்டங்களாக தேர்தல் நடத்தியதால் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுஅக் தோற்றுள்ளது. பல இடங்களில் அதிமுக வெற்றி பெற்றாலும் அதிமுக தொண்டர்களைத் தோல்வி அடைந்தவர்களாகே அறிவித்திருக்கிறார்கள் எனக் குற்றம்சாட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad