வால் சேவல் வளர்ப்பு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, October 8, 2021

வால் சேவல் வளர்ப்பு

வால் சேவல் வளர்ப்பு





தேனீ வளர்ப்பு முறை
தேனீப்பெட்டி:

தேனீக்களில் கொகத் தேனீ, இந்திய தேனீ மற்றும் இத்தாலிய தேனீ ஆகிய இனங்கள் அதிகமாக வளர்க்கப்படுகின்றன. தேனீக்களை பெட்டி முறையில் வளர்க்க தேனிப்பெட்டிகள் தேவை,

அடுக்கு தேனீக்களை செயற்கை முறையில் மரச்சட்டங்கள் உள்ள பெட்டிகளில் வைத்து வளர்க்கலாம். ஒவ்வொரு மரச்சட்டமும் ஒரு மேல் கட்டை, ஒரு அடிக்கட்டையுடன் 2 பக்க கட்டைகளால் இணைக்கப்பட்டுள்ளது. பெட்டியின்உள் தரப்படும் இந்த மரச்சட்டங்களில் தேனீக்கள் அடுக்கடுக்காக அடைகளை கட்டுகின்றன.

மரச்சட்டங்களுக்கு இடையேயும், சுற்றிலும் போதிய இடைவெளி கொடுக்க வேண்டும். அப்போது தான் தேனீக்கள் இடையில் அமர்ந்து தங்கள் பணிகளை செய்ய வசதியாக இருக்கும்.

தேனீ இனத்திற்கு ஏற்பவும், தேனீக்களுக்கு உணவு கிடைக்கும் அளவை பொறுத்தும் தேனீப்பெட்டிகள் தேர்வு செய்யப்பட வேண்டும். உருவில் சிறிய

இந்திய தேனீக்கள் 7 அல்லது 8 சட்டங்கள் கொண்ட பெட்டிகளிலும் வளர்க்கப்படுகின்றன.

இடம்:

தேர்வு செய்யப்படும் இடத்தை சுற்றிலும் 2 கி.மீ சுற்று வட்டாரத்தில் தேனீக்களுக்கு மதுரம் மற்றும் மகரந்தம் தரும் மரம், செடி, கொடிகள் இருக்க வேண்டும்.

பூச்சி மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படும் பயிர்களுக்கு அருகில் தேனீக்களை வளர்க்க கூடாது. ஏனென்றால் பூச்சி மருந்துகள் தேனீயின் மனநிலையை மாற்றி இறக்கச் செய்யும். தேனீப்பெட்டிகளை நிழலில் கிழக்கு பார்த்து வைக்க வேண்டும். ஒரு தேனீப்பெட்டிக்கும் இன்னொரு தேனீப்பெட்டிக்கும் குறைந்தது 4Metre இடைவெளி வைக்க வேண்டும். இதனால் வேலைக்கார தேனீக்கள் இடம் மாறி செல்வது தவிர்க்கப்படும்.

தேனீ வளர்ப்புக்கு உதவும் தேனீக்களை ஏற்கனவே தேனி வளர்ப்போரிடம் இருந்தோ, தேனி வளர்ப்பு பண்ணைகளில் இருந்தோ வாங்கிக் கொள்ளலாம். காலி தேனீப்பெட்டிகளின் உட்புறம் உள்ள தேன் மெழுகை உருக்கி பெட்டியில் தடவி என் விதைந்த தோட்டங்களில் பெட்டியை வைத்தால் தேனீக்கள் தானே வந்து பெட்டியில் அடையும்.

தேனை பிரித்து எடுத்தல்:

தேனீக்கள் பூக்களில் இருந்து சேகரிக்கும் தேனை தங்கள் நாக்கினால் உறிஞ்சி அத்துடன் உமிழ்நீரையும் கலந்து தங்களின் இரைப்பையில் சேமித்து வைக்கின்றன. இவை கூட்டிற்கு வந்ததும், உமிழ்நீர் கலந்த மதுரத்தை வாய்வழியே உமிழ்ந்து தேன் அறைகளில் சேமிக்கின்றன. இந்த தேன் முதிராத தேன். தேனீக்கள் தங்களது இறக்கைகளை கொண்டு விசிறுவதால் தேனில் உள்ள நீரின் அளவு குறைக்கப்படுகிறது. இவ்வாறு இயற்கையாக தேன் பக்குவப்படுத்தப்பட்டு கெட்டிப்படுத்தப்பட்ட பின்னர் தேன் அறைகள் மெழுரு முடிகளால் மூடப்படுகின்றன.

இத்தகைய மூடப்பட்ட அறைகளில் இருக்கும் தேன் முதிர்ந்த தேன் எனப்படும். தேன் பிரித்து எடுக்கும் கருவி கொண்டு தேன் அடைகளுக்கு சேதம் ஏற்படாமல் தேனை பிரித்து எடுக்க வேண்டும். இவற்றை தகுந்த பாதுகாப்பு முறைகளை கொண்டு கட்டுப்படுத்துவதன் மூலம் தேனீ வளர்ப்பை அதிகரிக்க முடியும். விவசாயிகள் தேனீக்களை வளர்ப்பதால் மிகப்பெரிய அளவில் பயிர்களில் மகசூலை பெற முடியும்.

சுய தொழில் துவங்க வாழ்த்துக்கள். பதிவை அனைவருக்கும் ஷேர் செய்தால் யாரோ ஒருவருக்கு உதவும் என்பதை நம்புகிறோம்.

No comments:

Post a Comment

Post Top Ad