வெற்றி பெற்ற மறுநாளே களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்: அடுத்த டார்கெட் சட்டமன்றமா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, October 14, 2021

வெற்றி பெற்ற மறுநாளே களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்: அடுத்த டார்கெட் சட்டமன்றமா?

வெற்றி பெற்ற மறுநாளே களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்: அடுத்த டார்கெட் சட்டமன்றமா?


நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 169 விஜய் மக்கள் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் போட்டியிட்டனர் என்பதும் அவர்களில் 110 பேர் வெற்றி பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் தாட்டிமானப்பள்ளி என்ற பகுதியில் 6வது வார்டில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி ஒருவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தனது கவுன்சிலர் பணியை உடனடியாக ஆரம்பித்து விட்டார்

அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்பதை அவர் தனது சொந்த செலவில் வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்த டார்கெட் சட்டமன்றம் என்ற நிலையில் வெற்றிபெற்ற 110 கவுன்சிலர்களும் பம்பரமாய் சுழன்று வேலை செய்ய முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறதுNo comments:

Post a Comment

Post Top Ad