திமுகவுடன் தேமுதிக கூட்டணியா? விஜயபிரபாகரன் பதில்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, October 10, 2021

திமுகவுடன் தேமுதிக கூட்டணியா? விஜயபிரபாகரன் பதில்!

திமுகவுடன் தேமுதிக கூட்டணியா? விஜயபிரபாகரன் பதில்!

திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்குமா என்பதை காலம்தான் பதில் சொல்லும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்க தேமுதிக முயற்சி செய்ததாகவும் ஆனால் அந்த முயற்சி பலிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இதனை அடுத்து அதிமுக கூட்டணியில் இருந்து விலகி, தினகரனுடன் கூட்டணி வைத்தது என்பதும் அந்த கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபகாலமாக திமுகவுடன் தேமுதிக நெருக்கமாக உள்ளது என்றும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்கும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறிய விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்குமா என்பதை காலம்தான் பதில் சொல்லும் என்றும் தற்போது வரை திமுக ஆட்சி சிறப்பாகவே இருக்கிறத ு என்றும் கூறியுள்ளார்

அவரது பதிலில் இருந்து எதிர்காலத்தில் திமுகவுடன் தேமுதிக கூட்டணிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad