45 அடி ஆழமுள்ள கிணற்றில் பாய்ந்த கார்: 3 பேர் நிலை என்ன? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, November 16, 2021

45 அடி ஆழமுள்ள கிணற்றில் பாய்ந்த கார்: 3 பேர் நிலை என்ன?

45 அடி ஆழமுள்ள கிணற்றில் பாய்ந்த கார்: 3 பேர் நிலை என்ன?

45 அடி ஆழமுள்ள கிணற்றில் பாய்ந்த கார்: 3 பேர் நிலை என்ன?தர்மபுரி மாவட்டத்தில் 45 அடி ஆழமுள்ள கிணற்றில் கார் ஒன்று விழுந்த நிலையில் அந்த காரில் இருந்த மூவரின் நிலை என்ன என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுதர்மபுரி மாவட்டம் பொன்னேரி அருகே 45 அடி ஆழக் கிணற்றுக்குள் கார் பாய்ந்தது. இந்த காரில் மேட்டூரை சேர்ந்த வீராவின் குடும்பத்தினர் சென்று கொண்டிருந்ததாகவும் பெங்களூர் செல்லும் வழியில் டீ குடிக்க நிறுத்தும் போது, வீராவின் மனைவி கீழே இறங்கி விட, அவருக்காக காரை திருப்பும்போது எதிர்பாராத வகையில் கிணற்றில் விழுந்ததாகவும் தெரிகிறது.
வீரா மற்றும் அவரது இரண்டு மகள்கள் காரில் இருந்ததாகவும் அவர்களது நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் விழுந்த கார் மற்றும் காரில் உள்ளவர்களை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Post Top Ad