கணவரை உயிருடன் புதைத்த மனைவி கைது: சென்னையில் பரபரப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, November 21, 2021

கணவரை உயிருடன் புதைத்த மனைவி கைது: சென்னையில் பரபரப்பு!

கணவரை உயிருடன் புதைத்த மனைவி கைது: சென்னையில் பரபரப்பு!

கணவரை உயிருடன் புதைத்த மனைவி கைது: சென்னையில் பரபரப்பு!சென்னையை கணவரின் ஜீவசமாதி அடையும் ஆசையை நிறைவேற்றுவதற்காக அவரை உயிருடன் புதைத்த மனைவி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை பெரும்பாக்கம் கலைஞர் நகரில் 60 வயதான குறி சொல்லும் சாமியார் நாகராஜ். இவருக்கு கடந்த 17ஆம் தேதி நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே தான்
நெஞ்சுவலியால் இறந்து விட வாய்ப்பு உள்ளதால் தன்னை மண்ணுக்குள் புதைத்து ஜீவசமாதி செய்யும்படி மனைவி லட்சுமியிடம் நாகராஜன் சத்தியம் வாங்கியதாக தெரிகிறது.

இதனையடுத்து வீட்டின் தோட்டத்தில் நாகராஜ் ஏற்கனவே தோண்டி வைத்திருந்த குழியில் லட்சுமி, தனது கணவர் நாகராஜை உயிருடன் புதைத்து விட்டதாகக் கூறப்படுகிறது
இரண்டு நாட்களாக தனது தந்தையை காணவில்லை என இவற்றை பற்றி எதுவும் தெரியாது அவர்களது மகள் தமிழரசி, தாயார் லட்சுமியிடம் கேட்ட போது நடந்த விவரங்களை லட்சுமி மகளிடம் கூறி உள்ளார். இதனையடுத்து மகள் தமிழரசி அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நாகராஜன் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு லட்சுமியை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad