மாணவிக்கு பாலியல் தொல்லை; தர்மஅடி கொடுத்த மக்கள்! – ஆசிரியர், தாளாளர் கைது! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, November 28, 2021

மாணவிக்கு பாலியல் தொல்லை; தர்மஅடி கொடுத்த மக்கள்! – ஆசிரியர், தாளாளர் கைது!

மாணவிக்கு பாலியல் தொல்லை; தர்மஅடி கொடுத்த மக்கள்! – ஆசிரியர், தாளாளர் கைது!

சேலத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் சிலம்பம் ஆசிரியர் மற்றும் பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலத்தில் தனியார் பள்ளியில் படித்து வரும் 12ம் வகுப்பு மாணவிக்கு சிலம்பம் ஆசிரியர் ராஜா என்பவர் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். மாணவி 8ம் வகுப்பு படிக்கும் சமயத்திலிருந்தே பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. தற்போது கொரோனா பொதுமுடக்கம் முடிந்து பள்ளி திறந்த பிறகும் பாலியல் தொல்லை தொடர்ந்துள்ளது.

இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். சரியான சமயத்தில் மாணவியை காப்பாற்றிய பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு மாணவி தனக்கு நேர்ந்த கொடுமைகளை சொல்ல ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேரடியாக சென்று ஆசிரியர் ராஜாவுக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் சிலம்ப ஆசிரியர் ராஜா மற்றும் பள்ளி தாளாளர் ஸ்ரீபன் தேவராஜ் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad