போலிஸுக்கு பயந்து கூவம் ஆற்றில் குதித்து ஒருவர் உயிரிழப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, November 6, 2021

போலிஸுக்கு பயந்து கூவம் ஆற்றில் குதித்து ஒருவர் உயிரிழப்பு!

போலிஸுக்கு பயந்து கூவம் ஆற்றில் குதித்து ஒருவர் உயிரிழப்பு!


சென்னை ஆவடியை அடுத்த பகுதியில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த சரவணன் என்பவர் போலிஸாருக்கு பயந்து கூவம் ஆற்றில் குதித்துள்ளார்.

சென்னை பட்டாபிராம் பகுதியில் உள்ள பெருமாள்சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன். 46 வயதாகும் கூலித்தொழிலாளியான இவருக்கு ஒரு மனைவியும், இரு மகள்களும் உள்ளனர். சரவணன் நேற்று தனது நண்பர்களுடன் சுடுகாட்டில் சீட்டு விளையாடியுள்ளார். இது சம்மந்தமாக தகவல் கிடைத்த போலிஸார் அந்த பகுதியில் ரோந்து சென்றததாக சொல்லப்படுகிறது.

அப்போது சீட்டு விளையாடியவர்கள் அனைவரும் போலிஸைப் பயந்து ஓடியுள்ளனர். சரவணன் சுடுகாட்டை ஒட்டி இருந்த கூவம் ஆற்றில் குதித்துள்ளார். இதில் அவர் உடல் ஆற்றில் இருந்த செடி கொடிகளில் சிக்கி அவர் மூழ்கியுள்ளார். இது சம்மந்தமாக அவரின் உறவினர்கள் மற்றும் ஊராருக்கு தகவல் தெரிய, தீயணைப்பு வீரர்களை வரவழைத்துள்ளனர். அவர்கள் 6 மணிநேரம் தேடி சரவணனின் உடலை மீட்டுள்ளனர். இது சம்மந்தமாக சரவணனின் உடலை வாங்க மாட்டோம் என போலிஸாரோடு அவரது உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.


No comments:

Post a Comment

Post Top Ad