பாலியல் துன்புறுத்தல்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும்: முதல்வரின் குழந்தைகள் தின செய்தி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, November 14, 2021

பாலியல் துன்புறுத்தல்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும்: முதல்வரின் குழந்தைகள் தின செய்தி!

பாலியல் துன்புறுத்தல்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும்: முதல்வரின் குழந்தைகள் தின செய்தி!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் மற்றும் உளவியல் துன்புறுத்தல்களை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கும் என குழந்தைகள் தின விழா செய்தியாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது:
குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த இந்திய ஒன்றியத்தின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளைக் குழந்தைகள் தினமாகக் கொண்டாடி மகிழ்கிறோம். குழந்தைகள் இந்நாட்டின் செல்வங்கள் - ஒளிச்சுடர்கள்!
ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு வகையில் திறமையானவர்கள், அழகானவர்கள்!

குழந்தைகளின் தனித் திறமைகளைக் கண்டறிந்து, அவர்களை வளர்த்தெடுப்போம்.குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கி, மழலைப்பருவத்தில் உலகை அச்சமின்றி அணுகிக் கற்க துணை நிற்போம்!

குழந்தைகளைப் பாதுகாப்பது ஒட்டுமொத்தச் சமூகத்தின் கூட்டுச் செயல்பாடாகும். அவர்களுக்கு எதிரான பாலியல் - உளவியல் துன்புறுத்தல்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும்.

No comments:

Post a Comment

Post Top Ad