பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-12-2021 - செவ்வாய் - (School Morning Prayer Activities)... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, December 14, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-12-2021 - செவ்வாய் - (School Morning Prayer Activities)...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-12-2021 - செவ்வாய் - (School Morning Prayer Activities)...


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 14.12.21

  திருக்குறள் :பால்: பொருட்பால் இயல் :அமைச்சியல் அதிகாரம்: வினைச்செயல்வகை குறள் எண்:677குறள்: செய்வினை செய்வான் செயல்முறை அல்வினை 

உள்ளறிவான் உள்ளம் கொளல் .பொருள்: ஒரு செயலில் வெற்றி அடைய விரும்புகிறவன், முன்னரே அது போன்ற செயல்களில் ஈடுபட்டு அனுபவம் பெற்றவரின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும்.பழமொழி :

If you give an inch he will take allஇடத்தைக் கொடுத்தால் , மடத்தை பிடிப்பான்

இரண்டொழுக்க பண்புகள் :1. பொய்யுரைத்தால் புகழும் கெடும் எனவே ஒரு போதும் பொய் கூற மாட்டேன்.2. சோம்பினால் வளர்ச்சி கெடும் எனவே எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க முயல்வேன்.பொன்மொழி :கடினமாக உழைத்தவர்கள்

எல்லாம் முன்னேறி விடவில்லை.

கவனமாகவும் நம்பிக்கையுடனும்

உழைத்தவர்களே வாழ்க்கையில்

முன்னேறி உள்ளனர்._____ அப்துல் கலாம்பொது அறிவு :1. இரத்தம் உறைதலை தடுக்கும் புரதம் எது? ஹிபேரின். 2. இரத்த சுழற்சியை கண்டறிந்தவர் யார்? வில்லியம் ஹார்வி.English words & meanings :

Go along with - agree with something, சிலரோடு சில காரியங்கள் செய்ய ஒத்துக் கொள்வது, Fourth Estate - the media and news papers .ஆரோக்ய வாழ்வு :பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது. சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது. வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். ஜீரணசக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

கணினி யுகம் :Alt+0162 - ¢  (Cent symbol)  Alt+0163 - £  (British Pound currency)

நீதிக்கதை

கீரிப்பிள்ளைதேவப்பட்டினம் என்றொரு கிராமத்தில் மாரப்பன் என்றொரு குயவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். பல வருடங்களாக அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை. அதனால் ஒரு கீரிப்பிள்ளையை எடுத்து தன் குழந்தையைப் போல் வளர்த்து வந்தனர். ஒரு நாள் குயவனின் மனைவி சுந்தரி கருவுற்றாள். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். வெகுகாலம் கழித்து பிறந்த முதல் குழந்தை என்பதால் அக்குழந்தை வெகு செல்லமாக வளர்க்கப்பட்டது. ஒருநாள் தண்ணீர் குடத்தை எடுத்துக் கொண்டு சுந்தரி குளக்கரைக்குச் சென்றாள். செல்லும் முன் தன் கணவனிடம் குழந்தை தூங்குகிறது அருகிலேயே இருந்து பார்த்துக் கொள்ளுங்கள். குழந்தையைக் கீரி கடித்துவிடப் போகிறது என்று கூறிவிட்டுச் சென்றாள். குயவனுக்கு திடீர் தாகம் ஏற்பட தண்ணீர் அருந்த சமையலறைக்குள் நுழைந்தான். அந்த நேரம் பார்த்து ஒரு கரு நாகம் வந்து குழந்தையின் தொட்டிலின்மேல் ஏற ஆரம்பித்தது. அதைப் பார்த்தக் கீரிப்பிள்ளை அப்பாம்பைத் துண்டு துண்டாகக் கடித்துக் குதறிவிட்டது. தண்ணீர் குடத்துடன் வந்த சுந்தரி கீரியின் வாயெல்லாம் இரத்தமாக இருந்ததைப் பார்த்து பதறிப்போனாள். அய்யோ! நம் குழந்தையை கீரிப்பிள்ளை கடித்து விட்டது என்று தவறாக நினைத்து ஆத்திரத்தில் சுந்தரி அக்கீரியின் மேல் நீர்க்குடத்தை தூக்கிப் போட்டாள். கீரிப்பிள்ளை அதே இடத்தில் வலி தாங்காமல் செத்தது. சுந்தரி தன் குழந்தைக்கு என்ன ஆயிற்றோ என்ற பதற்றத்தில் உள்ளே ஓடிச்சென்றுப் பார்த்தாள். குழந்தை தொட்டிலில் உறங்கிக் கொண்டு இருந்தது. பிறகு என்ன நடந்திருக்கும் என்று சுற்றும் முற்றும் பார்த்த அவளுக்கு ஒரே அதிர்ச்சி. தரையில் பாம்பின் உடல் பல துண்டுகளாக சிதறி இருந்தன. அவளுக்கு உண்மை புரிய ஆரம்பித்தது. அடடா! பாம்பைக் கொன்றுவிட்டு இரத்தத்துடன் இருந்த கீரிப்பிள்ளையைப் பார்த்துக் குழந்தையைத்தான் கடித்து விட்டதோ என்று தவறாக எண்ணி விட்டேனே. அருமையாக வளர்த்த கீரியைக் அவசரப்பட்டுக் கொன்று விட்டேனே! என்று கண்ணீர் விட்டுக் கதறினாள். சிறுகணநேரத்தில் நடந்து முடிந்து விட்ட இந்த நிகழ்ச்சிகளை கேட்டு அறிந்துக் கொண்ட குயவன் தனது மனைவியை சமாதானப்படுத்தினான். நீதி :

பதறிய காரியம் சிதறும்இன்றைய செய்திகள்14.12.21★ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி அரசுப்பள்ளி மாணவி கு.முனீஸ்வரி 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ராஜராஜ சோழனின் இலங்கை நாணயங்களை கண்டெடுத்துள்ளார்.★ஜனவரி 5-ம் தேதி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத் தொடர் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே நடைபெற உள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.★உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தாமதம்.★பாரதியார் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி: ரூ.3 லட்சம் பரிசு வழங்கப்படுவதாக ஆளுநர் மாளிகை அறிவிப்பு.★63 நாடுகளில் ஒமைக்ரான்: டெல்டாவைவிட வேகமாகப் பரவுகிறது; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.★ஆசிய துடுப்பு படகு சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு மேலும் 4 பதக்கம்.★ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: முதல் போட்டியில் தென்கொரிய அணியை சந்திக்கிறது இந்தியா.Today's Headlines

 ★ K. Muniswari, a student of Thirupullani Government School near Ramanathapuram has found 10th century Sri Lankan coins of Rajaraja Chola. ★ The Speaker has announced that a special session of the Legislature will be held on January 5 at Fort St. George. ★ Delay in admission counciling for undergraduate and postgraduate medical students' admission as there is a pending case in the Supreme Court. ★ Essay competition for school and college students to celebrate Bharathiyar's birthday: Governor's House announces Rs 3 lakh prize for winners.  ★ Omicron in 63 countries: spreading faster than delta;  World Health Organization warning. ★ Asian Paddle Boat Championship: 4 more medals for India. ★ Asian Champions Trophy Hockey: India meet South Korea in the first match.

 Prepared byCovai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

Post Top Ad