உதயநிதியை துணை முதலமைச்சராக்க வேண்டும்! – காங்கிரஸிலிருந்து வந்த பரிந்துரை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, December 13, 2021

உதயநிதியை துணை முதலமைச்சராக்க வேண்டும்! – காங்கிரஸிலிருந்து வந்த பரிந்துரை!

உதயநிதியை துணை முதலமைச்சராக்க வேண்டும்! – காங்கிரஸிலிருந்து வந்த பரிந்துரை!

சேப்பாக்கம் திமுக எம்.எல்.ஏவாக உள்ள உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க வேண்டும் என காங்கிரஸிலிருந்து பரிந்துரை வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மகனான உதயநிதி ஸ்டாலின் திரைப்பட தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருந்து வந்தார். பின்னர் கட்சி செயல்பாடுகளில் தீவிரமாக இயங்க தொடங்கிய அவருக்கு திமுக இளைஞரணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாகவும் ஆனார் உதயநிதி ஸ்டாலின்.

அமைச்சரவையில் உதயநிதிக்கு துறை ஒதுக்கப்படலாம் என அப்போதைய சமயம் பேசிக் கொள்ளப்பட்ட நிலையில் அப்படியாக எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநில பொது செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் என்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக நியமிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad