உணவு பாக்கெட்டுகளில் மோடி படத்துக்கு தடை.. வெளியான அதிரடி உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, January 8, 2022

உணவு பாக்கெட்டுகளில் மோடி படத்துக்கு தடை.. வெளியான அதிரடி உத்தரவு!

உணவு பாக்கெட்டுகளில் மோடி படத்துக்கு தடை.. வெளியான அதிரடி உத்தரவு!
உ.பி ரேஷன் கடைகளில் பிரதமர் மோடி, முதல்வர் யோகி படம் பதித்த உணவு பாக்கெட்டுகளை விநியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி, சட்டமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரேஷன் கடைகளில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் படங்கள் பதிக்கப்பட்ட உணவுப் பொருள் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் பிரதமர் மோடி, முதல்வர் யோகி படங்கள் பதிக்கப்பட்ட உணவு பாக்கெட்டுகள் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரப் பிரதேச உணவுப் பாதுகாப்பு ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்குப் பிறகு இதுதொடர்பான உத்தரவு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உணவுப் பாதுகாப்பு ஆணையர் சோரப் பாபுவால் அனுப்பிவைக்கப்பட்டது.

உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. பிப்ரவரி 10 முதல் மார்ச் 7ஆம் தேதி வரை மேற்கு உ.பி முதல் கிழக்கு உ.பி வரை ஏழு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad