சிறப்பு விடுமுறை - அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, March 16, 2022

சிறப்பு விடுமுறை - அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

அரசு ஊழியர்களுக்கு அரை நாள் சிறப்பு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது

தி காஷ்மீர் பைல்ஸ்’ இந்தி திரைப்படத்தை பார்க்க, அரசு ஊழியர்களுக்கு அரை நாள் சிறப்பு விடுப்பு அளித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
பாலிவுட் இயக்குனர் விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ என்ற இந்தி திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியது. காஷ்மீரில் இருந்து இந்து பண்டிட்கள் வெளியேற்றப்பட்டதை அடிப்படையாக வைத்து இந்தத் திரைப்படம் உருவாகி உள்ளது.

இந்த படத்துக்கு பாஜக ஆளும் ஹரியானா, குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் இயக்குனர் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். அந்த மாநிலத்திலும் படத்துக்கு வரிவிலக்கு வழங்குவதாக, முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து, ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் பார்ப்பதற்கு தாங்கள் விரும்பும் நாளில் மத்திய பிரதேச மாநில போலீசார் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று அம்மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா நேற்று அறிவித்தார்.

இந்நிலையில், அசாம் மாநிலத்தில், ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் பார்ப்பதற்கு, அரசு ஊழியர்களுக்கு அரை நாள் சிறப்பு விடுப்பு வழங்கப்படுவதாக, அம்மாநில முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளமான ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து உள்ளதாவது:
மாநில அரசு ஊழியர்கள் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் பார்க்க அரை நாள் சிறப்பு விடுமுறை அளிக்கப்படுகிறது. அவர்கள் தங்கள் உயர் அதிகாரிகளுக்கு தாங்கள் படம் பார்க்க செல்கிறோம் என்பதை தெரிவிக்க வேண்டும் மற்றும் மறுநாள் டிக்கெட்டுகளை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad