10 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு: வானிலை மையம்
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழக உள்மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் வியாழக்கிழமை (ஏப். 15) மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.
அதன்படி நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் போன்ற உள்மாவட்டங்களில் இன்று அதிகாலை முதலே பரவலாக மழை பெய்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியிலும் அதிகாலை முதலே கனமழை பெய்தது.
இந்நிலையில், தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment