அறநிலையத்துறையில் வேலை - விண்ணப்பிக்க அவகாசம்: - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, May 22, 2022

அறநிலையத்துறையில் வேலை - விண்ணப்பிக்க அவகாசம்:

அறநிலையத்துறையில் வேலை - விண்ணப்பிக்க அவகாசம்: 
அறநிலையத்துறையில் வேலை - விண்ணப்பிக்க அவகாசம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 7பி (தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலைப் பணி) செயல் அலுவலர் நிலை - 3ல் 42 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்விற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதி: 10, 12 அல்லது இணைக்கல்வித்தகுதி மற்றும் இளங்கலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனத்திடம் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மதம் மற்றும் சமய நிறுவனங்களில் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தேர்வுக் கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் தேர்வுக்கட்டணம் செலுத்த தேவையில்லை. 1.7.2022 அன்றுள்ளபடி, 25 வயது நிறைவடைந்தவர் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்து விளக்கம் தேவைப்படுபவர்கள், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தினை நேரில் அல்லது 1800 419 0958 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணின் மூலம், அனைத்து வேலை நாட்களிலும் முற்பகல் 10 மணி முதல் மாலை 5.45 மணி வரைதொடர்பு கொள்ளலாம்.

ஒருமுறை பதிவு மற்றும் இணையவழி விண்ணப்பம் குறித்த சந்தேகங்களுக்கு helpdesk@tnpscexams.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும்; இதர சந்தேகங்களுக்கு grievance.tnpsc@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad